வனச்சரக அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

குடியாத்தம் வனச்சரக அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-26 18:45 GMT

கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் ஊராட்சி மூலகாங்குப்பம் மற்றும் துருகம் கிராமங்கள் அருகே வனப்பகுதியில் பழமைவாய்ந்த கன்னிகோவில் உள்ளது. இங்கு பக்தர்க எளிதில் சென்று வருவதற்கு வசதியாக கட்டுமான பணியை மேற்கொண்டனர். குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் ஆய்வு செய்து, அத்துமீறி வனப்பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொண்டதாக துருகம் குழிகொல்லை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 38), மூலகாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (40), குமார் (30) ஆகிய மூன்று பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விஜயகுமாரை வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி அபராதம் அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணியினர் மற்றும் கிராம மக்கள் நேற்று இரவு இந்து முன்னணி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் குடியாத்தம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் மீது பதிவு செய்த வழக்கை கைவிட வேண்டும், அபராத தொகை விதிப்பதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே வனத்துறையினர் பிடித்துவந்த விஜயகுமாருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் அபராத தொகையை செலுத்தியபின் விடுவிக்கப்பட்டார். இந்தவழக்கில் வெங்கடேசன், குமார் ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்