இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-01-30 13:32 GMT

ஆம்பூரை அடுத்த கரும்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93-ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இதில் அவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி ஆசி பெற்றனர். மேலும் சிறுவயது பள்ளி பருவத்தில் மாணவ- மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்து கொண்ட விதம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பு காட்டி கல்வி கற்றுத்தந்த விதம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்