தென்காசியில் இந்து முன்னணியினர் போராட்டம்
கனல் கண்ணன் கைதை கண்டித்து தென்காசியில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் இசக்கிமுத்து, முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உலகநாதன் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.