இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்

திருச்செந்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-02-10 18:45 GMT

உடன்குடி:

திருச்செந்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இந்துக்கள் ஒற்றுமை, தினசரி கோவிலுக்கு செல்லுதல், இதிகாசம் புராணங்கள் பற்றி குழந்தைகளுக்கு விளக்குதல் போன்றவை குறித்து விரிவாக பேசினார்.

மேலும் அந்த கிராமத்தில் 5 பேருக்கு இந்து முன்னணி பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவராக சந்திரசேகரன், பொதுச் செயலாளராக முருகன், செயலாளராக குபேந்திரன், பொருளாளராக கணேசன், துணைத்தலைவராக பாஸ்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்