மங்கலம்பேட்டையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மங்கலம்பேட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-16 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை தேரடி வீதியில் இந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், கோவில்களின் சொத்துக்களை மோசடி செய்து வரும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்களை கண்டித்தும், மங்கலம்பேட்டை மங்களநாயகி கோவிலுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தையும், கோவிலை சுற்றியுள்ள கடைகளுக்கு வாடகை பெற்று அந்த வருமானத்தில் கோவிலை பராமரிப்பு செய்யாமல், வருடா வருடம் தேர்த் திருவிழா நடத்தாமல் இந்து மக்களை ஏமாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில், நகர நிர்வாகிகள், ராமு, கார்த்தி, விக்கி, சுந்தர், வெங்கடேசன் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்