இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க கூட்டம்
தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க கூட்டம் நடந்தது. தூத்துக்குடி இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
கூட்டத்தில், திருப்பூரில் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த நோட்டீசு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாரியப்பன், சுரேஷ்குமார், சக்திவேல், திருப்பதி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.