நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்
நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்
நாகையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உட்கோட்ட தலைவர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கணேசன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணியாளர்களை சாலைப்பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.