ஜெயங்கொண்டத்தில் நாளை உயர்கல்வி வழிகாட்டல் முகாம்

கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் ஜெயங்கொண்டத்தில் நாளை நடக்கிறது.

Update: 2023-06-29 19:07 GMT

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்கிற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படவுள்ளது. இந்த முகாமில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்