உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-28 18:27 GMT

தமிழகம் முழுவதும் கல்வித்துறையை மேம்படுத்த 'நான் முதல்வன்' திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 'கல்லூரி கனவு' என்ற செயல்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். நெமிலி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் மேல்நிலைக் கல்வி முடித்தவர்களில் 52 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்விகளில் சேருகிறார்கள், என்ற நிலை தற்போதுவரை இருந்து வருகிறது. இதை மாற்றி 80 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விகளில் சேர இப்பயிற்சி முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் உயர்கல்வி ஆலோசனை வழங்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. அதில் கருத்தாளர்களாக பேராசிரியர் சேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசன், ஆசிரிய பயிற்றுனர்கள் கோவிந்தராஜ், கார்த்திகேயன் மற்றும் முன்னாள் மாணவர்கள், எஸ்.எம்.சி. தலைவர், துணைத்தலைவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்