முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை
திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் நேரில் விசாரணை நடத்தினார்.
திருவலம்
திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் நேரில் விசாரணை நடத்தினார்.
கூடுதல் செயலாளர் விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து இன்று உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பல்வேறு ஆவணங்களை அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லா பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், பல்கலைக்கழகத்தில் சுமார் 112 கோடி ரூபாய்க்கு நிதி நிர்வாக முறைகேடுகள்,
பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டம் 1998-ன் கூறுகளை மீறி பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது. பல்கலைக்கழக தேர்வு முறைகேடு குறித்து ஓய்வு ெபற்ற பேராசிரியர் இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
2 மணி நேரம் விசாரணை
இதன் மீது விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை 2 மணி நேரத்துக்கு மேல் நடந்தது.
அதேபோல மனுதாரர் இளங்கோவனிடமும் அவர் விசாரணை நடத்தினார். அப்போது முறைகேடுகள் தொடர்பான 226 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை இளங்கோவன் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாசிடம் வழங்கினார்.
இந்த விசாரணை திருப்திகாரமாக உள்ளதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என இளங்கோவன் தெரிவித்தார்.