6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-01-03 18:45 GMT

நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள நந்திநாதேஸ்வரர் கோவில் முன் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. நந்தி நாதேஸ்வரர் கோவிலுக்கு இரவு நேரங்களில் வரும் பக்தர்கள் இந்த கோபுர மின்விளக்கின் வெளிச்சத்தில் அச்சமின்றி வந்து சென்றனர். இந்தநிலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 6 மாதங்களாக இந்த கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்