அதிக மதிப்பெண் பெற்றபோலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு போலீஸ் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகள், மேல்நிலைப் படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடிப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, உயர்கல்வி படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை தலா ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அதிக மதிப்பெண் பெற்ற, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரின் குழந்தைகளுக்கான காசோலையை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.