நன்னிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு

நன்னிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன.

Update: 2022-12-14 19:00 GMT

நன்னிலம், டிச.15 -திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நன்னிலம் கங்களாச்சேரி ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிளில் நேற்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். இதைப்போல திருமக்கோட்டை பகுதியிலும் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்