ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கருத்தரங்கம்

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-04-18 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட குழு மற்றும் சாத்தான்குளம் கிளை சார்பில் சமூக நீதியும், சவால்களும் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபற்றது. வக்கீல் ராஜின்ரூபஸ் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஒய்வுபெற்ற தாசில்தார் நடராஜன், வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலர் பால்துரை, பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பாய் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க சாத்தான்குளம் பொறுப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார். முன்னதாக சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கருத்தரங்கில் பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், சாத்தான்குளம் புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பவுலீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிருணைப்பாளர் சப்திகா டொமிலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜாண்சன் ஜெயக்குமார், கொம்மடிக்கோட்டை சந்தோசநாடார் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அரசு கல்லூரி முதல்வர் சக்திஸ்ரீ, சாத்தான்குளம் அரசு நூலகர் சித்திரைலிங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பேர்சில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்