ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

திசையன்விளையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-21 17:47 GMT

திசையன்விளை:

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவை முன்னிட்டு  ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுடலை ஆண்டவர் கோவில் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்திற்கு கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் பெருமாள், செண்பகவள்ளி ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட மனோ கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மனோ கல்லூரியில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்