ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Update: 2022-12-25 11:17 GMT

உடுமலை

இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணியும்படி உடுமலையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு ஆங்காங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக உடுமலை போக்குவரத்து போலீசார் சார்பில், இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. உடுமலை போலீஸ் நிலையம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் தளிசாலை, பொள்ளாச்சி சாலை, பழைய பஸ்நிலையம், பை-பாஸ் சாலை, ராஜேந்திரா சாலை, கபூர்கான் வீதி, பாபுகான் வீதி, சுப்பையா வீதி வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டு 70க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்