நேர விரயத்தை தவிர்க்கவே ஹெலிகாப்டர் பயணம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன் என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2023-04-18 06:09 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அண்ணாமலை தனது ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை கூறியிருப்பதாவது:- நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி. நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்