மதுபாட்டில்கள் திருட்டு

கந்திகுப்பம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் மதுபாட்டில்கள் திருடி சென்றனர். பணத்தை ஊழியர்கள் எடுத்து சென்றதால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

Update: 2022-12-19 18:45 GMT

பர்கூர்

கந்திகுப்பம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் மதுபாட்டில்கள் திருடி சென்றனர். பணத்தை ஊழியர்கள் எடுத்து சென்றதால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

டாஸ்மாக் கடை

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் மேற்பார்வையாளர் சின்னராசு, விற்பனையாளர்கள் சண்முகம், சம்பத் ஆகியோர் கடையை பூட்டி விட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர்.

அப்போது கடையின் முன்புற கதவு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டும், பூட்டு அறுக்கப்பட்டும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் பணம் வைக்கும் மேஜை திறந்து இருந்தது. பணத்தை ஊழியர்கள் எடுத்து சென்றதால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

வலைவீச்சு

ஆனால் கடையில் இருந்த மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து மேற்பார்வையாளர் சின்னராசு கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்