தேனி டாஸ்மாக் கிட்டங்கி முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி டாஸ்மாக் கிட்டங்கி முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-09-26 21:15 GMT

சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேனி டாஸ்மாக் கிட்டங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம், பிடித்தம் செய்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் காளிச்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், சுமைப்பணி சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்