வீரபாண்டி பிரிவு அருகே சாலையை அகலப்படுத்த இருபுறமும் ஒரே நேரத்தில் தோண்டப்பட்டுள்ள குழியால் கடும் போக்குவரத்து நெரிசல்

வீரபாண்டி பிரிவு அருகே சாலையை அகலப்படுத்த இருபுறமும் ஒரே நேரத்தில் தோண்டப்பட்டுள்ள குழியால் கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-13 09:41 GMT

அருள்புரம் 

வீரபாண்டி பிரிவு அருகே சாலையை அகலப்படுத்த இருபுறமும் ஒரே நேரத்தில் தோண்டப்பட்டுள்ள குழியால் கடும் போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையும் பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையும் எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். இந்த சாலைகளில் வணிக வளங்கள் .தொழில் நிறுவனங்கள், கடைகள் குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. வீரபாண்டி பிரிவு அருகே இந்த இரண்டு சாலைகளின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்த ஒரே நேரத்தில் குழி தோண்டி உள்ளார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாகத்தான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியும். இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதவாது:

வீரபாண்டி பிரிவு அருகே சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை அகலப்படுத்த இருபுறமும் ஒரே நேரத்தில் குழி தோண்டி உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை. கயிறும் கட்டவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் குழியில் விழுகின்றார்கள் .

கடமைக்கு மண்மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.ஒரு பக்கம் குழி தோண்டி பணியை முடித்துவிட்டு மறுபக்கம் குழி தோண்டியிருக்கவேண்டும். திட்டமிடாமல் இருபுறமும் குழி தோண்டி உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு பணியை செய்யும் போது திட்டமிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்கள்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்