காட்பாடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. 2½ மணி நேரம் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2022-10-21 17:20 GMT

காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. 2½ மணி நேரம் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

திடீர் போக்குவரத்து நெரிசல்

காட்பாடி பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடி ரெயில்வே பாலத்தில் இருந்து வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரும் வாகனங்கள் சிறிது, சிறிதாக நகர்ந்தது. இதனால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இதே போல விருதம்பட்டில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற வாகனங்களும் நெரிசலில் சிக்கியது. விருதம்பட்டு, காங்ேகயநல்லூர் கூட்ரோடு, சித்தூர் பஸ் நிலையம், தாராபடவேடு பஸ் நிறுத்தம், காட்பாடி ரெயில்வே பஸ் நிறுத்தம், காட்பாடி பஸ் நிறுத்தம், ஓடை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சில்க்மில் பஸ் நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவல் அறிந்ததும் காட்பாடி போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் என அனைவரும் வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடு இல்லை. வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நகர்ந்து சென்றது.

மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை 2½ மணி நேரம் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் நேற்று பணி முடிந்து செல்பவர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்