காட்பாடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையால் காட்பாடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-12-23 19:07 GMT

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையால் காட்பாடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால், சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் வேலூரில் இருந்து குடும்பத்துடன் சென்றனர். இதனால் வேலூர் புதிய பஸ்நிலையம், காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு செல்ல, வாகன போக்குவரத்து அதிகரித்தது.

இதனால் காட்பாடி செல்லும் பாலாற்று பாலத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலை மாலையில் இருந்து இரவு வரை நீடித்தது.

ரெயில் நிலையத்தில் கூட்டம்

காட்பாடி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பயணிகள் ரெயில்களில் ஏறுவதற்கு முண்டியடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகளை ஒழுங்கு படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்