தரகம்பட்டி அருகே கனமழை: அரசமடை குளம் உடைந்தது

தரகம்பட்டி அருகே கனமழை பெய்ததால் அரசமடை குளம் உடைந்தது.

Update: 2023-10-17 19:03 GMT

கடவூர் தாலுகா தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சியில் அரசமடை எனும் குளம் உள்ளது. 1½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் தற்போது ஆக்கிரமிப்பால் சிறிய மடையாக மாறிவிட்டது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த கன மழையினால் இந்த குளம் முழுவதுமாக நிரம்பி அதன் கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் பாதிக்கு மேல் வெளியேறியது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைப்பினை அடைத்து சரி செய்தனர். குளத்து நீர் வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்