தென்காசியில் நேற்று காலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இடையிடையே வெயிலும் அடித்தது. இந்த நிலையில் இரவு சுமார் 8 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் செங்கோட்டையிலும் நேற்று இரவு 8.30 மணி முதல் 9.15 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.