ஊட்டியில் கடுங்குளிருடன் தொடர் மழை: சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடிய தாவரவியல் பூங்கா
ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊட்டி
ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
பருவமழை தீவிரம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கியது.இதற்கிடையே நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதற்கு ஏற்றார் போல் கடந்த ஒரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது. நாள் முழுவதும் சாரல் மலையும் அவ்வப்போது லேசாக கனமழையும் பெய்து வருகிறது.
வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்
இதனால் ஆங்காங்கே அவ்வப்போது சாலையோரம் இருந்த மரங்கள் விழுகின்றன. அவற்றை தீயணைப்புத் துறையினர் வனத்துறையுடன் இணைந்து அகற்றி வருகின்றனர். இதேபோல் கடும் குளிர் நிலவுவதால் வேலைக்கு செல்பவர்கள் கம்பளி உடையுடன் செல்கின்றனர். கடும் குளிர் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டதால் ஊட்டி அரசு தகவல் பூங்கா உள்பட சுற்றுலா தளங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதே போல் படகு இல்லத்தில் நேற்று காற்று வீசிக் கொண்டே இருந்ததால் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன.
வாகன ஓட்டிகள் அவதி
இதன்ப நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு 3,144 பேரும், கல்லாருக்கு 70 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 136 பேரும், ரோஜா பூங்காவுக்கு 1634 பேர் மட்டுமே வந்தனர்.
இதேபோல் பஸ் நிலையம், ஏ.டி.சி. உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஊட்டியில் அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.