கோத்தகிரியில் பலத்த மழை:ஆதிவாசியின் வீடு இடிந்து விழுந்தது
கோத்தகிரியில் பலத்த மழை:ஆதிவாசியின் வீடு இடிந்து விழுந்தது
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா, கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான 4,100 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோடநாட்டில் 31 மில்லிமீட்டர் மழையும், கோத்தகிரியில் 17 மில்லி மீட்டர் மற்றும் கீழ் கோத்தகிரியில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.