தென்காசியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

தென்காசியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2023-04-29 18:45 GMT

தென்காசியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், மதியம் 1.30 மணியளவில் தூறல் விழத்தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து இருந்தது. மிதமாக விழுந்த தண்ணீரில் உள்ளூர் மக்களும், குறைந்த அளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் குளித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்