சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
சென்னை,
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது. இந்த நிலையில், மாலையில் தீடீரென கனமழை கொட்டியது.
மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி, தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.