இடி, மின்னலுடன் பலத்த மழை

வந்தவாசி, சேத்துப்பட்டில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Update: 2022-06-16 17:54 GMT

வந்தவாசி

வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெண்குன்றம், சாலவேடு, பாதிரி, பிருதூர், மருதாடு, மாம்பட்டு, வடவணக்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் சேத்துப்பட்டு பகுதியில் இன்று மாலை 6.30 மணி முதல் 7.20 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் குளிர்ந்த காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்