இடி, மின்னலுடன் பலத்த மழை

இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2022-06-14 20:32 GMT

பெரம்பலூர்:

பலத்த மழை

பெரம்பலூரில் நேற்று காலை முதல் மாலை வரை கோடையை மிஞ்சும் வகையில் வெயில் அடித்தது. மாலையில் கரிய மேகங்கள் திரண்டு இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 50 நிமிடம் சூறாவளிக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் நீடித்த இந்த பலத்த மழையால், பெரம்பலூரில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி நிரம்பி வழிந்தது. வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் இருந்து பிரதான மதகில் வழிந்து கடையோடிய உபரி நீர் துறைமங்கலம் பெரிய ஏரியை சென்று அடைந்து வருகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கியது

பெரம்பலூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு பல இடங்களில் இதேபோன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அரணாரை, எளம்பலூர், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய் உள்ளிட்ட ஏரிகளில் நீர் ஊற்று பெருக்கெடுத்து வருகிறது. பெரம்பலூரில் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாலக்கரை, நகராட்சி மைதானம், தெற்கு தெரு, ரோவர் சாலை, வெங்கடேசபுரம் மதன கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் சில தெருக்களிலும் தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரோவர் சாலை, திருநகர், மாவட்ட அரசு மருத்துவமனை சாலை, மதனகோபாலபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடி, பெரிய ஏரி மற்றும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை அடைந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்