இடி-மின்னலுடன் பலத்த மழை

திண்டிவனம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனத்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்று வீசியது. பின்னர் இடி மின்னலுடன் மழைபெய்ய தொடங்கியது.

முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக வெளுத்து கட்டியது. சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

அதேபோல் ஜக்காம் பேட்டை, சிங்கனூர், இறையானூர், சலவாதி, பட்டணம், ஊரல் உள்ளிட்ட திண்டிவனத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பகலில் சுட்டெரித்த வெயிலால் அவதி அடைந்த நிலையில் மாலையில் பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இடி மின்னல் இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்