சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் 20 நிமிடம் மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
சேத்துப்பட்டு -வந்தவாசி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்லும்போது அங்குள்ள கடைக்குள் மழைநீர் செல்கிறது. இதனால் கடை நடத்துபவர்கள் அவதிப்பட்டனர்.