பலத்த காற்றுடன் கன மழை

திருவாரூர் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

Update: 2022-09-07 18:09 GMT

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூரில் நேற்று இரவு 7.15 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் அவறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்