சென்னிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை:மரம் விழுந்து கார் சேதம்வீட்டின் மேற்கூரைகள் பறந்தன

சென்னிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது.

Update: 2023-04-22 20:52 GMT

சென்னிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரம் சாய்ந்து விழுந்ததில் கார் சேதமானது. மேலும் வீட்டின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு பறந்தன.

சூறைக்காற்றுடன் பலத்த மழை

சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இதனால் பகல் 12 மணிக்கு மேல் சாலைகளில் செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சென்னிமலையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சூறைக்க்காற்று வீசியது. பின்னர் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கார் சேதம்

காற்று பலமாக வீசியதால் சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில் கார் சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் மரகதம் என்பவர் வீடும் காற்றினால் பலத்த சேதம் அடைந்தது. இதேபோல் நல்லபாளியில் உள்ள அருணகிரி என்பவருடைய வீட்டின் சிமெண்டாலான மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

10 மில்லி மீட்டர்

இதைத்தொடர்ந்து சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ேகாடை காலத்தில் பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சென்னிமலை பகுதியில் நேற்று முன்தினம் 10 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்