துறையூர்:
துறையூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8.30 மணி வரை நீடித்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியதால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தன. திருச்சி சாலை மற்றும் கிராமங்களில் சுற்றி இருக்கும் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. கிராமத்தில் சூறைக்காற்றில் சிக்கி விவசாயி ஒருவரின் இரண்டு ஆடுகள் செத்தன. மேலும் மாலை 6 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு வரை துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் சிக்கித் தவித்த பொதுமக்கள் பலத்த மழை மற்றும் குளிர்ந்த காற்றால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.