கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2023-11-23 01:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (23-11-2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்