சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் பெய்த மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Update: 2022-06-19 21:08 GMT

சென்னை,

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நள்ளிரவில் பல இடங்களில் கனமழை பெய்தது. பட்டினப்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, கிண்டி, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் பெய்த மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்