வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதி பணி பாதிக்கப்பட்டது. இந்த மழையின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.