திருச்சியில் பலத்த மழை

திருச்சியில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-22 19:19 GMT

திருச்சியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்தது. பின்னர் மதியம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி அளவில் திருச்சி மாநகரம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை மதியம் 2 மணி வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படி சென்றனர். மேலும் மத்திய பஸ் நிலையம், மன்னார்புரம், கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, முசிறி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்