நீலகிரியில் வெளுத்துவாங்கும் கனமழை... குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

நீலகிரியில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் கனமழையால், பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

Update: 2022-09-13 08:04 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் கனமழையால், பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பயிர்களும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து, மழை பெய்து வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்