திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென ஆலங்காயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.