சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை குளிர்ந்த காற்று வீசியது. ரம்மியமான இந்த காற்றை பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்தநிலையில் இரவு 9 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பலத்த இடியுடன் மழை பெய்தது. 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. கடுமையான வெயிலால் தவித்து வந்த சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் திடீரென பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.