சங்கராபுரம், ரிஷிவந்தியத்தில் பலத்த மழை

சங்கராபுரம், ரிஷிவந்தியத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-05-01 18:45 GMT

சங்கராபுரம்,

தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 1.30 மணியளவில் லேசான சாரலுடன் பெய்யத்தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் தூறிக்கொண்டு இருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதேபோல் ரிஷிவந்தியம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்