சங்கராபுரம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடா்ந்து பகல் 1 மணிவரை சாரல் மழைபெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.