ராஜபாளையம் பகுதிகளில் கனமழை

ராஜபாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது.

Update: 2023-05-29 19:23 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரித்த வந்தது. இ்ந்தநிலையில் நேற்று மாலை திடீெரன இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் மழை பெய்தது. மேலும் நகர் பகுதியில் 1 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தன. அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், தளவாய்புரம், புனல்வேலி, புத்தூர், நல்லமங்கலம், முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இ்ந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்