ராஜபாளையம் பகுதிகளில் பலத்த மழை

ராஜபாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-03-16 19:23 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்தநிலையில் திடீரென நேற்று மாலை ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதியில் இடியுடன் சாரல் மழை பெய்தது. மேலும் தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ½ மணி நேரம் பெய்த இந்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்தது குளிர்ச்சியான சூழல் நிலவியது. சொக்கநாதன்புத்தூர் பகுதியில் உள்ள நடுமாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. திடீரென பெய்த மழையினால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் குளிர்ந்த நிலை நிலவியது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்