பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-08-10 19:21 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கோடை காலத்தை விட அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் எப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனா். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. புதிதாக வெட்டப்பட்ட நீர் நிலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இரவில் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் கிரீன் சிட்டியில் உள்ள திறந்த வெளி பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பலத்த மழை பெய்ததால் தீ அணைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரம்பலூர்-33, செட்டிகுளம்-33, பாடாலூர்-28, அகரம்சீகூர்-47, லெப்பைக்குடிகாடு-70, புதுவேட்டக்குடி-37, எறையூர்-21, கிருஷ்ணாபுரம்-8, தழுதாழை-58, வி.களத்தூர்-50, வேப்பந்தட்டை-83.

Tags:    

மேலும் செய்திகள்