பெரம்பலூரில் பலத்த மழை

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-08-26 19:34 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழை பெய்தபோது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே சில மரங்கள் சாய்ந்து விழுந்தன. விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களும் சாய்ந்தன. இரவு விட்டு, விட்டு மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்