நொய்யல் பகுதியில் கனமழை

நொய்யல் பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2023-07-08 18:22 GMT

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 12 மணி அளவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்