நத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் நத்தம் பஸ் நிலையம், சாலைகளில் தண்ணீா் ஆறாக ஓடியது. மேலும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தேங்கிய தண்ணீரை வாகனங்கள் பீய்ச்சி அடித்து சென்றன. மழையால் மானாவாரி பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.